புற்றுநோய் முதல் இருமல் வரையுள்ள நோய்களை குணமாக்கும் மிளகு! இவ்வாறு பயன்படுத்தி பாருங்கள்
இது வெறும் உணவில் சுவை சேர்ப்பதோடு நின்றுவிடாமல் பல்வேறு நோய்களையும் குணப்படுத்துகிறது.
ஏனெனில் மிளகில் உள்ள வைட்டமின் ஏ, சி, கரோடின்கள், மற்றும் பிற சத்துக்கள் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றி நோயிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
அந்தவகையில் மிளகை உணவில் சேர்த்து கொள்ளுவதனால் ஏற்படும் மருத்துவ நன்மைகள் பற்றி பார்ப்போம்.
- மிளகுத்தூள், வெங்காயம், உப்பு மூன்றையும் அரைத்து மயிர் புழு வெட்டு உள்ள இடத்தில் தேய்த்து வர முடி முளைக்கும்.
- இருதயம் பழுதடைந்து மெதுவாக வேலை செய்கையில் மிளகுத்தூள் உணவில் சேர்ப்பதன் மூலம் இருதயம் சுறு சுறுப்படைந்து ரத்த ஓட்டத்தை உடலெங்கும் சீராக்குகிறது.
- மிளகு எல்லாவித விஷங்களுக்கும் ஒரு சிறந்த முறிவாகப் பயன்படுகிறது. ஒரு கைப்பிடி அறுகம் புல்லையும், பத்து மிளகையும் இடித்து கசாயமிட்டு அருந்தி வந்தால் சகல விசக்கடிகளும் முறியும்.
- மிளகுத்தூளை தேன் கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் உடனே நிற்கும். தேனுக்குப் பதில் பனங்கற்கண்டு சேர்த்துக் கொள்ளலாம்.
- சாதாரண ஜலதோசத்திற்கும் காய்ச்சலுக்கும் நன்கு காய்ச்சிய பாலில் ஒரு சிட்டிகை மிளகுப் பொடியும், ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியும் கலந்து இரவில் ஒரு வேளை அருந்தி வர நல்ல பலன் தரும்.
- 10 துளசி இலைகளுடன் ஐந்து மிளகைச் சேர்த்து 200 மி.லி நீர் விட்டு கொதிக்க வைத்துக் குடித்து வந்தால் கோழை கட்டுதல் நீங்கும்.
- முகப்பருக்களால் அவதிப்படுபவர்கள் சந்தனம், ஜாதிக்காயுடன் மிளகு சேர்த்து அரைத்துப் பருக்களின்மீது பற்றுப்போட்டு வந்தால் நாளடைவில் உதிர்ந்துவிடும்.
- காணாக்கடி போன்று உடலில் தடிப்புடன் வரும் பல அலர்ஜித் தடிப்புகளில் வேளைக்கு 5-7-9-11-13 என்று எண்ணிக்கையை அதிகமாக்கி மிளகைச் சாப்பிட்ட வர பித்தம் சீரடைந்து தடிப்பு குறைந்துவிடும்.
- மார்பகப் புற்றுநோய் மற்றும் கேன்சர் கட்டிகள் வளர்ச்சியை தடுக்க மிளகு உகந்தது. உணவில் மிளகு மற்றும் மஞ்சள் சேர்த்து சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் எதிர்ப்புப் பலன்கள் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளது.
புற்றுநோய் முதல் இருமல் வரையுள்ள நோய்களை குணமாக்கும் மிளகு! இவ்வாறு பயன்படுத்தி பாருங்கள்
Reviewed by Author
on
December 19, 2019
Rating:
Reviewed by Author
on
December 19, 2019
Rating:


No comments:
Post a Comment