அண்மைய செய்திகள்

recent
-

தனது சொந்த செலவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோவில் கட்டி சிலை வைத்த விவசாயி!


திருச்சி மாவட்டத்தில் வாழும் விவசாயி ஒருவர் தனது சொந்த செலவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோயில் கட்டிய சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள எரகுடி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 50). விவசாயியான இவருக்கு திருமணமாகி பானுமதி (40) என்ற மனைவியும் தீபா என்ற மகளும், சதீஷ்குமார், சூர்யா ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

இவர் பா.ஜனதாவின் தொண்டராகவும், எரகுடி விவசாய சங்க தலைவராக இருந்து வந்துள்ளார்.
சங்கர் சிறுவயது முதலே பிரதமர் நரேந்திரமோடியின் தீவிர ரசிகராக, தனது சொந்த செலவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோவில் கட்டி சிலை வைத்து வழிபட வேண்டும் என விரும்பியுள்ளார்.



இதன் காரணமாக துறையூரை அடுத்த எரகுடியில் உள்ள தனது விவசாய தோட்டத்தில் மோடிக்கு கோவில் கட்டி சிலை அமைத்து, அதற்கு தினமும் பாலாபிஷேகம் செய்து, தீபாராதனை காண்பித்து வழிபாடு நடத்தி வந்துள்ளார்.
இது குறித்து சங்கர் கூறுவதாவது; “மோடியின் மீது சிறுவயது முதலே கொண்ட அன்பால், எந்தவித எதிர்பார்ப்பும், யாருடைய உதவியும் இன்றி எனது சொந்த செலவில் கோவில் கட்ட விரும்பினேன். விவசாயத்தில் போதிய வருமானம் கிடைக்காததால் கோவில் கட்ட முடியவில்லை.
தற்போது, விவசாயத்தில் கிடைத்த ஓரளவு பணத்தை கொண்டு, கோவில் கட்டும் பணியை கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தொடங்கி கோவில் கட்டி முடித்துவிட்டேன்.
கட்சியையும் தாண்டி பிரதமர் மோடி ஒரு நல்ல மனிதர். அவர் கொள்கையால் ஈர்க்கப்பட்டு இந்த கோவிலை கட்டி உள்ளேன்.
மேலும் கட்சியின் மூத்த தலைவர்களை கொண்டு கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பதே எனது லட்சியம்” என்று கூறியுள்ளார்.
 -Maalaimalar-
தனது சொந்த செலவில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோவில் கட்டி சிலை வைத்த விவசாயி! Reviewed by Author on December 26, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.