அரசாங்க ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்க திறைசேரி அனுமதி -
அரசுக்கு சொந்தமான சட்ட ரீதியான அமைப்புகள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் ஊழியர்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான கொடுப்பனவுகளை வழங்க திறைசேரி அனுமதி வழங்கியுள்ளது.
அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்கள், அரச நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் அரசாங்கத்தின் அனைத்து சட்ட ரீதியான நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான சுற்றரிக்கை திறைசேரியினால் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து ஊழியர்களுக்கும் 2019 ஆம் ஆண்டிற்கான கொடுப்பனவை செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொடுப்பனவு செலுத்த தகுதியுள்ள நிறுவனங்களுக்கு, கடந்த ஆண்டு கொடுக்கப்பட்ட கொடுக்கப்பட்ட கொடுப்பனவுகளுக்கமைய, அவர்களின் 2018 நிதியாண்டு நிதி அறிக்கையின் அடிப்படையில் இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சில அரச நிறுவனங்களுக்கான பணிப்பாளர் சபைகள் நியமிக்கப்படாதிருந்தாலும் கூட, வழங்கப்படக் கூடிய மேலதிக கொடுப்பனவை வழங்குமாறும் அந்த சுற்றுநிரூபத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசாங்க ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்க திறைசேரி அனுமதி -
Reviewed by Author
on
December 13, 2019
Rating:

No comments:
Post a Comment