சிங்கள மொழியில் மட்டும் தேசிய கீதம் பாடுவதை ஏற்க முடியாது-சீ.வி.கே.சிவஞானம்
சிங்கள மொழியில் மட்டும் தேசிய கீதம் பாட வேண்டும் என்ற அரசாங்கத்தின் கோரிக்கையானது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என வடக்கு மாகாண சபையின் முன்னாள் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
இன்றைய தினம் கல்வியங்காட்டில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக தேசிய கீதமானது சிங்கள மொழியிலும் தமிழ் மொழியிலும் கடந்த ஆட்சியின்போது பாடப்பட்டு வந்தது.
எனினும் தற்போது ஆட்சியில் உள்ள இந்த அரசாங்கமானது ஏன் இவ்வாறு இன நல்லுறவை முறிக்கும் செயற்பாட்டில் ஈடு படுகிறது எனவும் கேள்வி எழுப்பினார்.
அத்தோடு இந்த அரசாங்கமானது பழிவாங்கும் செயற்பாடுகளில் தான் ஈடுபட்டு வருகின்றது.
அதிலும் அண்மையில் கைது செய்யப்பட்ட சம்பிக்க ரணவக்க அவர்கள் குறித்த வழக்கு விசாரணையில் இருந்து விடுவித்த பின்னர் மீண்டும் அவரது வழக்கு தூசு தட்டப்பட்டு மீண்டும் நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
எனவே இந்த அரசாங்கமானது அதனை நிறுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
சிங்கள மொழியில் மட்டும் தேசிய கீதம் பாடுவதை ஏற்க முடியாது-சீ.வி.கே.சிவஞானம்
Reviewed by Author
on
December 28, 2019
Rating:

No comments:
Post a Comment