மன்னாரில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி-படங்கள்
மன்னார்-மதவாச்சி பிரதான வீதி,உயிலங்குளம் சிறுநீலாசேனை பகுதியில் நேற்று வியாழக்கிழமை 26-12-2019 இரவு குடும்பஸ்தர் ஒருவர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துவக்கினால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் 2 பிள்ளைகளின் தந்தையான மாரி தர்மராசா வயது-(41) என தெரியவந்துள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,
உயிலங்குளம் சிறுநீலாசனை பகுதியில் நேற்று வியாழக்கிழமை (26) இரவு குடும்பஸ்தர் ஒருவர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துவக்கினால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் உயிலங்குளம் வட்டிப்பித்தான் மடு கிராமத்தைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான மாரி தர்மராசா வயது-(41) என தெரியவந்துள்ளது.
குறித்த குடும்பஸ்தர் மனைவி பிள்ளைகளை பிறிந்து வாழ்ந்து வந்த நிலையில், உயிலங்குளம் சிறுநீலாசனை பகுதியில் தனிமையில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையிலே குறித்த குடும்பஸ்தர் தங்கி இருந்த வீட்டிற்கு முன் வீதியில் இனந்தெரியாக நபர்களினால் நேற்று வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் மன்னார் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை பார்வையிட்டனர்.
பின்னர் விசே தடயவியல் நிபுனத்துவ பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரனைகளை மேற்கொண்டனர்.
இன்று வெள்ளிக்கிழமை 27.12.2019 காலை 10.15 மணியளவில் மன்னார் மாவட்ட பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை பார்வையிட்டதோடு,சடலத்தை மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by Author
on
December 27, 2019
Rating:

No comments:
Post a Comment