ஈரான் பிராந்தியத்தில் அச்சுறுத்தல்! 180 பயணிகள் பலி - இலங்கையிலிருந்து செல்லும் விமான சேவையில் மாற்றம் -
அமெரிக்கா - ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலை உலகளாவிய ரீதியில் தாக்கம் செலுத்தியுள்ளது.
ஈரான் மற்றும் ஈரான் வான் எல்லை ஊடாக பயணங்களை மேற்கொள்வதை தவிர்த்துக் கொள்ள ஸ்ரீலங்கா விமான சேவை நிறுவனம் தீர்மானித்துள்ளது.
கொழும்பில் இருந்து லண்டன் செல்லும் விமானங்கள், ஈரான் - ஈராக் வான் பரப்பின் ஊடாக செல்வதை தவிர்க்கவுள்ளது.
ஈராக்கிலுள்ள அமெரிக்க விமான படைத்தளம் மீது ஈரான் எறிகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இதன் காரணமாக பாரிய மோதல் வெடிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று விமான விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து துருக்கி நோக்கி பயணித்த பயணிகள் விமானம் வெடித்து சிதறியுள்ளது. அதில் பயணித்த 180 பேரும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈரான் பிராந்தியத்தில் அச்சுறுத்தல்! 180 பயணிகள் பலி - இலங்கையிலிருந்து செல்லும் விமான சேவையில் மாற்றம் -
Reviewed by Author
on
January 08, 2020
Rating:

No comments:
Post a Comment