டிரம்பைக் கொல்பவர்களுக்கு 3 மில்லியன் டொலர் ரொக்கப் பரிசு..! ஈரான் எம்.பி அதிரடி அறிவிப்பு -
ஈராக்கில் கொல்லப்பட்ட தளபதி சுலைமானியின் சொந்த ஊரான கெர்மன் மாகாணத்தில் உள்ள கஹ்னூஜ் நகரின் எம்.பி அஹ்மத் ஹம்ஷே இவ்வாறு அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றி ய அஹ்மத் ஹம்ஷ, டிரம்பைக் கொல்பவர்களுக்கு, கெர்மன் மாகாண மக்கள் சார்பாக 3 மில்லியன் டொலரை நாங்கள் ரொக்கமாக வழங்குவோம் என அதிரடியாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை அச்சுறுத்துவதற்கு ஈரானின் மதகுரு ஆட்சியாளர்கள் எடுத்த முடிவா என்பது குறித்து அஹ்மத் ஹம்ஷே விரிவாகக் கூறவில்லை.
மேலும், ஈரான் அணு ஆயுதங்கள் வைத்திருந்தால் அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கப்படும். ஈரான் ஏவுகணைகளை உருவாக்க வேண்டும் என்று எம்.பி நாடாளுமன்றத்தில் தெரிவித்தாக உள்ளுர் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இன்று நம்மிடம் அணு ஆயுதங்கள் இருந்தால், அச்சுறுத்தல்களிலிருந்து நாம் பாதுகாக்கப்படுவோம்.
வழக்கத்திற்கு மாறான ஆயுதங்களை சுமக்கும் திறன் கொண்ட நீண்ட தூர ஏவுகணைகளின் உற்பத்தியை நமது திட்டமாக வைக்க வேண்டும். இது நமது இயல்பான உரிமை என்று எம்.பி கூறியதாக ஈரான் ஊடகமான ஐ.எஸ்.என்.ஏ மேற்கோளிட்டுள்ளது.
டிரம்பைக் கொல்பவர்களுக்கு 3 மில்லியன் டொலர் ரொக்கப் பரிசு..! ஈரான் எம்.பி அதிரடி அறிவிப்பு -
Reviewed by Author
on
January 21, 2020
Rating:
Reviewed by Author
on
January 21, 2020
Rating:


No comments:
Post a Comment