ஒரே இன்னிங்சில் 400 ரன்கள் எடுத்த என் சாதனையை இந்த மூன்று வீரர்கள் தான் முறியடிக்க முடியும்: பிரையன் லாரா -
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் இடது கை துடுப்பாட்ட வீரர் பிரையன் லாரா.
அபாரமான ஆட்டத்தால் எந்தவொரு காலக்கட்டத்திலும் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் 375 ரன்கள் விளாசி அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றிருந்தார்.
அவுஸ்திரேலிய வீரர் மேத்யூ ஹெய்டன் 380 ரன்கள் அடித்து அந்த சாதனையை முறியடித்தார். ஆனால் ஹெய்டன் சாதனையை குறுகிய காலத்திற்குள் லாரா 400 ரன்கள் அடித்து முறியடித்தார்.
கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை 400 என்பதுதான் உடைக்க முடியாத சாதனையாக இருக்கிறது.
இந்நிலையில் தற்போதுள்ள வீரர்களில் இவர்களால் என்னுடைய சாதனையை ஒருவேளை முறியடிக்க முடியும் என லாரா தெரிவித்துள்ளார்.
இது குறித்து லாரா கூறுகையில் 4-வது இடத்தில் களம் இறங்கி விளையாடி வரும் ஸ்டீவ் ஸ்மித்தால் என்னுடைய சாதனையை முறியடிக்க மிகவும் கடினமானது. அவர் சிறந்த வீரர்தான், ஆனால் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்த அவரால் விளையாட முடியாது.
டேவிட் வார்னர் போன்ற வீரர்களால் உறுதியாக முடியும். அதே போல விராட் கோஹ்லி முன்னதாகவே களம் இறங்கினால் எட்டிவிடுவார்.
ரோகித் சர்மாவுக்கு அவருடைய நாளாக அமைந்தால் உடைத்துவிடுவார் என கூறியுள்ளார்.
ஒரே இன்னிங்சில் 400 ரன்கள் எடுத்த என் சாதனையை இந்த மூன்று வீரர்கள் தான் முறியடிக்க முடியும்: பிரையன் லாரா -
Reviewed by Author
on
January 04, 2020
Rating:
Reviewed by Author
on
January 04, 2020
Rating:


No comments:
Post a Comment