ஆஸ்திரேலியாவில் குடியுரிமைக் கோருபவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி
ஆஸ்திரேலியாவில் குடியுரிமைப் பெறுவது, ஆஸ்திரேலியாவுக்கு செல்லக்கூடிய பெரும்பாலான குடியேறிகளின் நோக்கமாக இருந்து வருகின்றது. ஆனால், ஆஸ்திரேலிய அரசின் கடுமையான கட்டுப்பாட்டால் குடியுரிமைக்கு விண்ணப்பவர்களின் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை குடியுரிமைத் தொடர்பான புள்ளிவிவரம் விவரிக்கிறது.
கடந்த 2018-19 நிதியாண்டில் ஆஸ்திரேலிய குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ள குடியேறிகளின எண்ணிக்கை 138,387 ஆகும். அதுவே, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 42 சதவீதம் வீழ்ச்சியடைந்து காணப்படுகின்றது. கடந்த 2017- 18 நிதியாண்டில் 239,413 குடியேறிகள் குடியுரிமைக் கோரி விண்ணப்பித்திருக்கின்றனர். இதுவே, கடந்த 5 ஆண்டுகளில் அதிகபட்ச எண்ணிக்கையை இருக்கின்றது.
இந்த நிதியாண்டை பொறுத்தமட்டில், கடந்த 4 மாதங்களில் 48,255 பேர் குடியுரிமைக் கோரி விண்ணப்பித்துள்ளனர்.
விண்ணப்பம் தொடர்பான முடிவுக்கு இரண்டாண்டுகள் காத்திருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார் ஆஸ்திரேலிய இடப்பெயர்வு கவுன்சலின் கர்லா வில்ஷிரீ. கடந்த ஜூலை மாதம், ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிப்பதற்கான விசா எண்ணிக்கை 1 லட்சத்து 90 ஆயிரமாக இருந்த நிலையில், 1 லட்சத்து 60 ஆயிரமாக ஆஸ்திரேலிய அரசு குறைத்துள்ளது.
--

Reviewed by Author
on
January 31, 2020
Rating:
Reviewed by Author
on
January 31, 2020
Rating:

No comments:
Post a Comment