வெளிநாடு ஒன்றில் இலங்கை மாணவிகள் மூவர் உயிரிழப்பு! பொலிஸார் தீவிர விசாரணை -
அஜர்பைஜான் நாட்டில் இடம்பெற்ற தீ விபத்து ஒன்றில் இலங்கை மாணவிகள் மூவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த மாணவிகள் தங்கியிருந்த வீட்டு தொகுதியில் ஏற்பட்ட தீவிபத்தின் போது, புகையை சுவாசித்தமையின் காரணமாகவே உயிரிழந்து விட்டதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அஜர்பைஜான் நாட்டில் உள்ள Sabail மாவட்டத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த மூவரும் அந்நாட்டில் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்கும் மாணவிகள் என தெரிவிக்கப்படுகின்றது.
21, 23, மற்றும் 25 வயதுடைய மூன்று யுவதிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலம் மருத்துவ பரிசோதனைக்கான வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
தீப்பற்றி எரிவதை கண்ட அயலவர்கள், குறித்த மாணவிகள் தங்கியிருந்த வீட்டின் ஜன்னலை உடைக்க முயன்றனர். எனினும், அது காலத்தாமதமாகி விட்டது என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், குறித்து மூன்று மாணவிகளும் விஷம் குடித்தே தற்கொலை செய்துகொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த பின்னணியில் அந்நாட்டு பொலிஸார், சட்டத்தரணிகள் மற்றும் MES தீயணைப்பு வீரர்கள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாடு ஒன்றில் இலங்கை மாணவிகள் மூவர் உயிரிழப்பு! பொலிஸார் தீவிர விசாரணை -
Reviewed by Author
on
January 11, 2020
Rating:
Reviewed by Author
on
January 11, 2020
Rating:


No comments:
Post a Comment