கொரோனா வைரஸ் பயத்தால் அவுஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தப்பட்ட சீன மகளிர் கால்பந்து அணி -
சீனாவின் வுஹானில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்றுநோயால் தற்போதுவரை 132 பேர் உயிரிழந்திருப்பதோடு, உலகம் முழுவதிலும் 6000க்கும் அதிகமானோர் பாதிப்படைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் பெப்ரவரி 9 ஆம் திகதி நடைபெற உள்ள AFC மகளிர் ஒலிம்பிக் தகுதிப்போட்டிக்காக புதன்கிழமையன்று அவுஸ்திரேலியா வந்தடைந்த சீன மகளிர் கால்பந்து அணி பிரிஸ்பேனில் தனிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்கள் பெப்ரவரி 5 ஆம் திகதி வரை ஒரு உள்நகர ஹோட்டலுக்குள் தங்கள் நேரத்தை செலவிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
வைரஸ் தீவிரத்தால் சீன அணி ஏற்கனவே 'தி மாடில்டாஸ்' அணிக்கு எதிரான முதல் குரூப் பி போட்டியில் தங்களது முக்கியமான இரண்டு வீரர்களை தவறவிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் பயத்தால் அவுஸ்திரேலியாவில் தனிமைப்படுத்தப்பட்ட சீன மகளிர் கால்பந்து அணி -
Reviewed by Author
on
January 31, 2020
Rating:

No comments:
Post a Comment