இந்தியா எங்கள் தேசமல்ல.... உள்நாட்டு போரை சந்திக்க வேண்டி வரும்: சீமான் ஆவேசம் -
"பாரத் மாதாகீ ஜே" எனக் கூறுபவர்கள் தான் இந்தியாவில் வசிக்க முடியும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சமீபத்தில் பேசியிருந்தார்.
இது குறித்த கேள்விக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “நாங்கள் பாரத மாதாவின் பிள்ளைகள் இல்லை. நாங்கள் தமிழ்தாயின் மக்கள். தமிழ்தாய் வாழ்க என்றுதான் சொல்லுவோம்.
இந்த நாடு நாடாவதற்கு முன்பு இந்த நிலத்தில் நீண்ட காலமாக வாழக்கூடிய பூர்வகுடி மக்கள் நாங்கள். நாங்கள் பெருத்த தேசிய இனத்தின் மக்கள். இந்தியா எங்கள் தேசமல்ல. எங்கள் தேசம் தமிழ் தேசம். இந்திய நாட்டின் குடிமக்கள் நாங்கள்.
வெள்ளைக்காரர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட மாநிலங்களின் ஒன்றியம்தான் இந்தியா. ‘மாநிலங்களின் அவை’தான் இந்தியா.
இது மாநிலங்களின் ஒன்றியம் என்பதை நினைவில் வைத்து பேச வேண்டும் என ப.சிதம்பரம் கூட மாநிலங்களவையில் பேசியுள்ளார்.
பிரதேசங்களின் உரிமைக்கு முன்னுரிமை கொடுக்காமல் இந்தியா வலிமையான நாடு என்று செயல்படத் தொடங்கினால் உள்நாட்டு போரை சந்திக்க வேண்டி வரும், தவிர்க்க முடியாது என அம்பேத்கர் சொல்லியுள்ளார்.
அந்த நிலைக்கு மத்திய அரசு எங்களை தள்ளாமல் இருப்பது தேச ஒற்றுமைக்கு நல்லது” என்று சீமான் கூறினார்.
இந்தியா எங்கள் தேசமல்ல.... உள்நாட்டு போரை சந்திக்க வேண்டி வரும்: சீமான் ஆவேசம் -
Reviewed by Author
on
January 05, 2020
Rating:
Reviewed by Author
on
January 05, 2020
Rating:


No comments:
Post a Comment