சாத்தியமாகட்டுமே இவ்வாண்டோடு....
பிறந்தது புத்தாண்டு
பிறக்கட்டும் மனங்களிலும்
சிறந்த பண்புகளும் ஒழுக்கவிழுமியமும்
மறந்து போகட்டும் பழையது எல்லாம்
பறந்து பறந்து உழைத்தும்
மெய் மறந்து வாழும்
மனிதர்கள் நாம்
மனித மாண்பை மறந்து
குறைந்து போகும் அன்புள்ளங்கள்
நிறைந்து வரும் துன்ப வெள்ளங்கள்
உறைந்து போயிருக்கும் உரிமை எண்ணம்
அறைந்து செல்கின்றது ஒவ்வொரு ஆண்டும்
ஆளப்பிறந்தவன் தமிழனா
அடுத்தவன் கையில் வாழப்பிறந்தவனா
அத்தனையும் இழந்த பின்பும்
ஆண்டவனும் கூட வரவில்லை
ஆனாலும் அத்தனையும் போனாலும்
அன்னைத்தமிழும் ஆசிரும்
அரணாயிருக்கா அடிமைசங்கிலி
அறுத்தெறிந்து எழுந்து வந்து
அண்டம் முழுதும்
அரசமைப்போம் -தமிழ்
அன்னை ஆசியோடு
அண்ணணின் ஈழக்கனவோடு
அது சாத்தியமாகட்டுமே இவ்வாண்டோடு
-தமிழ்நிதி-
சாத்தியமாகட்டுமே இவ்வாண்டோடு....
Reviewed by Author
on
January 01, 2020
Rating:

No comments:
Post a Comment