இலங்கையில் கொரோனோ வைரஸ்! முதலாவது நோயாளி கண்டுபிடிப்பு -
இலங்கையில் முதலாவது கொரோனோ வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவை சேர்ந்த 43 வயதான பெண்ணொருவரே நோய்த் தொற்றுக்கு இலக்காகி உள்ளார்.
அவர் சீனாவின் Hubei மாகாணத்தில் இருந்து இலங்கை வந்தவர் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இலங்கையர்கள் யாரும் அச்சமடைய வேண்டாம் என சுகாதாரம் ஊக்குவிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரம் ஊக்குவிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள குறித்த பெண்ணின் இரத்த மாதிரி ஊடாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் கொரோனோ வைரஸ்! முதலாவது நோயாளி கண்டுபிடிப்பு -
Reviewed by Author
on
January 28, 2020
Rating:

No comments:
Post a Comment