மலேசியாவுக்கு செல்ல முயன்ற இந்தோனேசியர்கள் கைது
இந்தோனேசியாவின் வடக்கு Sebatik பகுதியிலிருந்து மலேசியாவின் சாபா பகுதிக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற 13 இந்தோனேசியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தோனேசியர்கள் மலேசியாவுக்கு சட்டவிரோதமாக செல்வது பற்றி கிடைத்த தகவலின் அடிப்படையில், மலேசியாவை இணைக்கக்கூடிய Sebatik மாவட்டத்தின் Bambangan துறைமுகத்தில் இந்தோனேசிய அதிகாரிகள் விசாரித்துள்ளனர்.
பின்னர், சாலை வழியாக குடியேறிகள் மலேசியாவுக்கு செல்ல முயல்வதாக தகவல் கசிந்ததன் அடிப்படையில் மலேசியாவை நோக்கி சென்றவர்களை பரிசோதனை செய்ததில் முறையான ஆவணங்களின்றி பயணித்த 13 இந்தோனேசியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
இவர்கள் மலேசியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்றதாக கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இதில் கைதானவர்களில் ஐந்து ஆண்கள், ஐந்து பெண்கள், இரு சிறுவர்கள் மற்றும் ஒரு சிறுமி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Reviewed by Author
on
January 24, 2020
Rating:
Reviewed by Author
on
January 24, 2020
Rating:

No comments:
Post a Comment