நாடே எதிர்பார்த்திருக்கும் நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட புதிய திகதி அறிவிப்பு -
முன்னதாக அவர்களை ஜனவரி 22 அன்று தூக்கிலிட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
நிர்பயா வழக்கில் குற்றவாளிகள், அக்ஷய் குமார், வினய் ஷர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய நான்கு பேருக்கும் வரும் ஜனவரி 22ஆம் திகதி காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட அதிகாரப்பூர்வ ஆணை சமீபத்தில் பிறப்பிக்கப்பட்டது.
இருப்பினும் அவர்களில் ஒருவரான முகேஷ் சிங் ஜனாதிபதிக்கு கருணை மனு தாக்கல் செய்துள்ளதால் அவர்களை ஜனவரி 22 அன்று தூக்கிலிட முடியாது என்று டெல்லி அரசு தெரிவித்திருந்தது.
இந்நிலையில் முகேஷ் சிங் தாக்கல் செய்த கருணை மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று நிராகரித்தார்.
வெள்ளிக்கிழமை காலை மத்திய உள்துறை அமைச்சகம், இந்த கருணை மனுவை ஜனாதிபதிக்கு அனுப்பிய சில மணி நேரங்களிலேயே இது நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் புதிய திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மூன்று பேர் அல்லது மூன்று பேரில் ஒருவர் பிப்ரவரி 1ஆம் தேதிக்குள் கருணை மனு தாக்கல் செய்தால் தூக்கிலிடுவதற்கான திகதி மீண்டும் மாறலாம் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
நாடே எதிர்பார்த்திருக்கும் நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட புதிய திகதி அறிவிப்பு -
Reviewed by Author
on
January 18, 2020
Rating:
Reviewed by Author
on
January 18, 2020
Rating:


No comments:
Post a Comment