இலங்கையின் விரைவில் வெளியாகவுள்ளது புதிய வீதி வரைபடம் -
இலங்கையின் புதிய வீதி வரைபடம் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த வரைபடத்தை இம்மாத நடுப்பகுதியில் வெளியிடுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக அளவீட்டு பணிப்பாளர் நாயகம் எஸ்.எம்.பி.ரி.சங்கக்கார தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில், புதிய வீதி வரைபடத்தின் நிர்மாண பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்திருக்கிறது.
வங்கி மற்றும் அரச நிறுவனங்களை உள்ளடக்கிய பொது இடங்கள் தொடர்பான தகவல்கள், அந்த இடங்களுடன் தொடர்பு கொள்ள கூடிய தொலைபேசி இலக்கங்களுடன் புதிய வீதி வரைபடம் தயாரிக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.
இலங்கையின் வீதி வரைபடம் இறுதியாக 2014ஆம் ஆண்டு பூர்த்தி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் விரைவில் வெளியாகவுள்ளது புதிய வீதி வரைபடம் -
Reviewed by Author
on
January 06, 2020
Rating:

No comments:
Post a Comment