பிள்ளைகளின் எதிர் காலத்தில் பெற்றோர்களின் பங்களிப்பு -மன்னார் கறிற்றாஸ்- வாழ்வதயத்தின் இயக்குனர் அருட்தந்தை S.அன்ரன் அடிகளார்.
சிறுவர்களாகிய உங்களுக்கு கிடைக்கும் நல்ல சந்தர்ப்பங்களை பயன் படுத்தி பிள்ளைகள் முன்னேற்றம் அடைய வேண்டும் எனவும் பிள்ளைகளின் எதிர் காலத்தில் பெற்றோர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது என மன்னார் கறிற்றாஸ்- வாழ்வதயத்தின் இயக்குனர் அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார் தெரிவித்தார்.
மன்னார் கறிற்றாஸ்-வாழ்வுதயத்தின் ஏற்பாட்டில் 'இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்' எனும் தொனிப்பொருளில் சிறுவர்களுக்கான விழிப்பூட்டல் கருத்தமர்வு இன்று சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் கறிற்றாஸ்- வாழ்வுதய கேட்போர் கூடத்தில் கறிற்ராஸ்- வாழ்வதயத்தின் இயக்குனர் அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார் தலைமையில் முழு நாள் கருத்தமர்வாக இடம் பெற்றது.
இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,
சிறுவர்களின் எதிர் காலம் கருதி கறிற்றாஸ்-வாழ்வுதயம் விழிப்பூட்டல் செயலமர்வுகள் மட்டுமல்லாது தாய்,தந்தையினை இழந்த பிள்ளைகளுக்கும் பொருளாதார பின்னடைவினால் கல்வியினை தொடர முடியாது உள்ள பிள்ளைகளை மிகவும் துல்லியமாக இனம் கண்டு மாதாந்தம் நூற்றுக்கணக்கான பிள்ளைகளுக்கு கல்வி உதவியை செய்து வருகின்றது.
இவ் உதவித்திட்டத்திற்காக வெளி நாடுகளிலிருந்து உதவி செய்பவர்களின் எண்ணப்பாடு என்னவெனில் தாம் செய்யும் உதவியினால் பிள்ளை கல்வியிலும் ஒழுக்கத்திலும் முன்னேற்றம் அடைக்கின்றாரா? என்பது பற்றியதாகவே அமைகின்றது.
சிறுவர்களாகிய உங்களுக்கு கிடைக்கும் இவ்வாறான சந்தர்ப்பங்களை பயன்படுத்தி பிள்ளைகள் முன்னேற்றம் அடைய வேண்டும்.
பிள்ளைகளின் எதிர் காலத்தில் பெற்றோர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது.
பிள்ளைகளின் கல்வி சார் முன்னேற்ற அறிக்கையினை பெற்றோர்கள் ஒவ்வொரு தவணையும் பரிசீலனை செய்து பார்ப்பது மிக முக்கியமானதாகும்.என அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த கருத்தமர்வில் கறிற்றாஸ் வாழ்வுதயத்தின் திட்ட இலக்கு கிராமங்களில் இருந்து சுமார் 200 ற்கும் மேற்பட்ட சிறுவர்கள் கலந்து கொண்டனர்.
இவர்களோடு பெற்றோர்கள் சிலரும் கலந்து கொண்டனா குறித்த செயலமர்விற்கு வளவாளராக மன்னார் நகர பிரதேச செயலகத்தின் சமூக சேவைகள் பிரிவு பொறுப்பதிகாரி சந்திர போஸ் கலந்து சிறுவர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.
இதன் போது சிறுவர்களின் கருத்து பகிர்வுகளுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by Author
on
February 02, 2020
Rating:

No comments:
Post a Comment