மன்னாரில் இருந்து பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்து அமெரிக்கர்.
அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் தலைமன்னார் முதல் தமிழகத்திலுள்ள தனுஷ்கோடி வரையிலான சுமார் 30 கி.மீ தொலைவுள்ள பாக் ஜலசந்திபாக் ஜலசந்தி கடலை 10.15 மணி நேரத்தில் நீந்தி கடந்து சாதனை புரிந்துள்ளார்.
பாக் ஜலசந்தி கடற்பகுதி தமிழகத்தையும் இலங்கையையும் பிரிக்கும் நீரிணை ஆகும். இராமேஸ்வரம் தீவும், அதனை தொடர்ந்துள்ள மணல் தீட்டுக்களான ஆதாம் பாலமும் பாக் ஜலசந்தி கடற்பகுதியை மன்னார் வளைகுடாவில் இருந்தும் பிரிக்கிறது.
இந்தியாவில் மிகவும் ஆழம் குறைந்த அதே சமயம் பாறைகளும், ஆபத்தான ஜெல்லி மீன்களும் நிறைந்த கடற்பகுதியாகும்.
சர்வதேச அளவில் பல்வேறு நீச்சல் போட்டியில் சாதனை படைத்த அமெரிக்காவைச் சார்ந்த குறித்த பெண்ணான எடிஹ (45) தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடற்பகுதியை நீந்தி கடப்பதற்காக கடந்த மாதம் டெல்லியில் உள்ள வெளியுறவுதுறை, பாதுகாப்புதுறை அமைச்சகங்கள் மற்றும் இலங்கை தூதரகத்திற்கு அனுமதி கோரி கடிதம் அனுப்பி இருந்தார்.
இந்திய - இலங்கை இரு நாட்டு அனுமதியும் கிடைத்த நிலையில் இலங்கையிலுள்ள தலைமன்னாரிலிருந்து இன்று (26) அதிகாலை 05.00 மணிக்கு இங்கிலாந்தை சார்ந்த ஆடம் மோஸ் என்பவருடன் சேர்ந்து எடிஹ நீந்த தொடங்கினார்.
12.05 மணியளவில் இலங்கை - இந்திய சர்வதேச எல்லைக்கு வந்தடைந்தார்கள். பிற்பகல் 03.15 மணியளவில் தனுஷ்கோடி அரிச்சல் முனை அருகே உள்ள முதலாம் தீடை அருகே வந்தனர். இவர்களுக்கு உதவியாக இலங்கை கடற்படையின் ரோந்து படகு சர்வதேச எல்லை வரையிலும், இந்திய கடற்பகுதியில் கடலோர காவல்படையின் ஹொவர் கிராஃட் கப்பலும் பாதுகாப்பினை வழங்கின.

 Reviewed by Author
        on 
        
February 27, 2020
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
February 27, 2020
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
February 27, 2020
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
February 27, 2020
 
        Rating: 

.jpg) 
 
.jpg) 
 
No comments:
Post a Comment