அண்மைய செய்திகள்

recent
-

ஆபத்தான கொரோனா வைரஸ் குறித்து இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!


கொரோனா வைரஸ் தொற்று குறித்து இலங்கையர்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் வைரஸ் தொற்றுக்கு உள்ளான பெண் இனங்காணப்பட்டு சிகிச்சையின் மூலம் குணமடைந்துள்ளார். எனினும் அதன்மூலம் கொரோனா வைரஸின் தாக்கம் அகன்றுவிட்டதாக எண்ணக்கூடாது என சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

சீனாவின் வுஹான் நகரில் முதல் முதலாக கொரோனா நோய்த் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. அது சீனாவின் வேறு பகுதிகளுக்கும் பரவியது. தற்போது உலகின் பல நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.
இதன் காரணமாக கொரோனா வைரஸ் தொடர்பில் மக்களுக்கு சரியான மதிப்பீட்டு ஆலோசனை வழங்க வேண்டும்.
உடலுக்குள் வைரஸ் சென்றால் 14 நாட்களுக்கு நோய் அறிகுறிகள் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், ஒரு நோயாளியிடம் இருந்து இன்னுமொரு நோயாளிக்கு எந்தளவு பரவுகின்றது என்பது தொடர்பில் உரிய தகவல் இன்னமும் கிடைக்கவில்லை.

இதன் காரணமாக கொரோனா வைரஸ் ஆபத்தான நோய் அல்ல என்ற எண்ணத்தை ஒரு போது இலங்கை மக்களின் மனங்களில் ஏற்படுத்த கூடாதென அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம், பொதுமக்களை எச்சரித்துள்ளது.
ஆபத்தான கொரோனா வைரஸ் குறித்து இலங்கையர்களுக்கு எச்சரிக்கை! Reviewed by Author on February 04, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.