அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பிரதேச சர்வமத குழு பேருவளை பகுதிக்கு நல்லிணக்க விஜயம்-படங்கள்

நாடளாவிய ரீதியில் இடம் பெற்றுவரும் இன,மத ரீதியான பிரச்சினைகளை பிரதேச ரீதியில் இல்லாதொழிக்கும் முகமா  மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நல்லிணக்க களப்பயண நிகழ்வானது கடந்த 07-02-2020 ஆம் திகதி தொடக்கம் 9-02-2020 திகதி வரை பேருவளையில் இடம்பெற்றது.

அண்மைக்காலமாக இடம்பெற்று வருகின்ற மத இன ரீதியான முறுகல் நிலையைத் தவிர்த்து மதங்கள் மற்றும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக மன்னார் மாவட்டத்தில் செயற்பட்டு வரும் பிரதேச சர்வமத குழுவினர் மற்றும் பேருவளையில் செயற்பட்டுவரும் சர்வமத குழுவினரையும் ஒன்றிணைக்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்டு குறித்த கால விஜய நிகழ்வின் போது சர்வமத தலைவர்கள் கிராம சேவகர்கள் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் ஊடகவியளாலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 குறித்த நிகழ்வின் போது மன்னார் மாவட்ட சர்வமத குழுவானது பேருவளையில் உள்ள சர்வமத குழுவுடன் இணைந்து பேருவளை பகுதியில் உள்ள பெளத்த இஸ்லாம் இந்து ஆலயங்களை தரிசித்ததுடன் பேருவளை பகுதியில் உள்ள சிங்கள கிராமங்களிலுள்ள மக்களையும் சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டமை குறிப்பிடதக்கது.












மன்னார் பிரதேச சர்வமத குழு பேருவளை பகுதிக்கு நல்லிணக்க விஜயம்-படங்கள் Reviewed by Author on February 10, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.