அண்மைய செய்திகள்

recent
-

பிள்ளைகளை பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது! அங்கஜன் இராமநாதன் -


கல்வியில் முன்னேற்றமடைவதன் மூலமே எமது உரிமைகளை பெற்றக்கொள்ள முடியுமென நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி - பூநகரி, முழங்காவில் ஆகிய பகுதிகளில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் மக்கள் தொடர்பு அலுவலகங்கள் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளன.

இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,
பொருளாதார ரீதியில் இந்த நாட்டை முன்னேற்றுவதற்கு இந்த புதிய அரசு தீர்மானித்துள்ளது. அந்த அடிப்படையில் பட்டதாரிகளுக்கும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கும் வேலைவாய்ப்புக்களை இந்த அரசு வழங்கவுள்ளது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி எமது பிரதேசங்களை அபிவிருத்தி செய்வோம். அத்துடன் மக்களின் தேவைகளையும் இனங்கண்டு அதனையும் தீர்க்க இந்த அலுவலகங்கள் உதவியாக இருக்கும்.

யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் இடம்பெற்ற சம்பவத்தினால் எமது கல்வி பின்னடைந்து செல்கின்றது.
அடுத்த தலைமுறை கல்வியில் முன்னேற்ற வேண்டும் என்று எல்லோரும் பாடுபடுகின்றனர். ஆனால் இன்று பிள்ளைகளை பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.
பிள்ளைகளை பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது! அங்கஜன் இராமநாதன் - Reviewed by Author on February 10, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.