அப்பெண்டிக்ஸ் நோய்: பின்விளைவு மற்றும் சிகிச்சை முறை -
இந்த நோய் மலம் அடைத்து கொள்வது, குடல் புழுக்களால் ஏற்படும் அடைப்பாலும் உண்டாகிறது.
இது குறிப்பாக 15-25 வயதிற்கு உட்பட்டோருக்கு அதிகமாக ஏற்படும்.
அறிகுறிகள்
தீடிரென்று வயிற்றின் தொப்புள் பகுதியில் வலி மற்றும் வயிற்றில் வலது கீழ்புறத்தில் வலி, வாந்தி மற்றும் காய்ச்சல் ஏற்படும்.
ஆரம்பத்தில் அறுவை சிகிச்சை செய்து அப்பெண்டிக்சை அகற்றி விட்டால் பல பின் விளைவுகளை தடுக்கலாம்.
பின் விளைவுகள்
பின் விளைவுகளில் முக்கியமானது சீழ்பிடித்த அப்பெண்டிக்ஸ் வெடித்து வயிற்றில் சீழ்பரவி ஜன்னி ஏற்படும், அப்பெண்டிக்ஸ் கட்டி உண்டாவது, அப்பெண்டிக்ஸ் சுற்றி சீழ்பிடித்து கொள்வது, குடல் அடைப்பு ஏற்படும் போன்ற பல சிக்கலான பின் விளைவுகள் உண்டாகும். அப்பெண்டிசைட்டிஸ் தான் என்று கண்டறிவதற்கு மருத்துவருக்கு உடல் பரிசோதனையும் மற்றும் ரத்த பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனைகளும் போதும்.
சிகிச்சை
அப்பெண்டிசைட்டிஸ் தான் என்று அறிந்து கொண்டவுடன் உடனடியாக அறுவை சிகிச்சை மருத்துவரை அணுகி லேப்ராஸ்கோப்பி மூலம் அறுவை சிகிச்சை செய்து விரைவில் முழுமையாக குணமடைந்து விடலாம்.
தகுந்த நேரத்தில் அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் தான் பின் விளைவுகள் ஏற்பட்டு லேப்ரோஸ்கோப்பி மூலம் செய்ய முடியாமல் Open Operation செய்து நோயாளியின் உயிரை காப்பாற்ற போராட வேண்டிய நிலை ஏற்படும். லேப்ரோஸ்கோப்பி என்பது சிறு துவாரத்தின் மூலம் செய்ய கூடிய நவீன அறுவை சிகிச்சை முறையாகும்.
அப்பெண்டிக்ஸ் நோய்: பின்விளைவு மற்றும் சிகிச்சை முறை -
Reviewed by Author
on
February 11, 2020
Rating:
Reviewed by Author
on
February 11, 2020
Rating:


No comments:
Post a Comment