ஏரியிலிருந்து வெளியான மர்மமான புதிய வைரஸ்-குழப்பத்தில் விஞ்ஞானிகள்! -
பிரேசிலிய நகரமான பெலோ ஹொரிசொன்டேயில் உள்ள ஒரு செயற்கை ஏரியான பம்புல்ஹா ஏரியில், எதிர்பாராத விதமாக புதிய வைரஸ் ஒன்று வெளியாகியிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
தன்னுடன் வாழ இராணுவ வீரர்களை நீருக்கடியில் கவர்ந்த அமானுஷ்ய தேவதை யாரா என்பதனை அடிப்படியாக கொண்டு, இந்த புதிய வைரஸிற்கு 'யாரா வைரஸ்' என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த வைரஸில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மரபணுக்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை, இதற்கு முன்னர் ஆராய்ச்சியாளர்கள் கண்டிராத, 'மர்மமானவை' மற்றும் முற்றிலும் தனித்துவமானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஞ்ஞானிகள் வைரஸ் மரபணுவை கண்டுபிடிப்பதற்காக, டி.என்.ஏவைப் வரிசைப்படுத்தியுள்ளனர். அதில் கண்டுபிடிக்கப்பட்ட 74 மரபணுக்களில் வெறும் 6 மரபணுக்கள் மட்டுமே இதற்கு முன்பு கண்டறியப்பட்டவையாக இருந்துள்ளது.
பிரேசிலின் ஃபெடரல் யுனிவர்சிட்டி ஆஃப் மினாஸ் ஜெரெய்ஸ் தலைமையிலான குழுவின் கூற்றுப்படி, ஈர சூழலில் வாழும் அமீபா என்ற ஒற்றை செல் உயிரினத்திலிருந்து யாரா வைரஸ் எடுக்கப்பட்டுள்ளது.
இப்போதைக்கு, யாரா வைரஸ் மனிதர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் கொடுப்பதாக தெரியவில்லை. இது அமீபா இடையே மட்டுமே பரவக்கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் துவங்கி உலகம் முழுவதிலும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் கொடிய கொரோனா வைரஸ் வெடிப்பிற்கு மத்தியில் இந்த கண்டுபிடிப்பு வந்துள்ளது.
COVID-19 கொரோனா வைரஸ் முதன்முதலில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. வேகமாக பரவ ஆரம்பித்த இந்த வைரஸிற்கு தற்போதுவரை, 1,000 க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதோடு, 44,500 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏரியிலிருந்து வெளியான மர்மமான புதிய வைரஸ்-குழப்பத்தில் விஞ்ஞானிகள்! -
Reviewed by Author
on
February 12, 2020
Rating:
Reviewed by Author
on
February 12, 2020
Rating:


No comments:
Post a Comment