டொரண்டோ துப்பாக்கி சூடு...38 வயது தமிழ் பெண் பலி.....படம்
ஒண்டாரியோ மாகாணத்திலுள்ள அஜின்கோட்( Agincourt) பகுதியில் இடம் பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் காயமடைந்த இருவரும் வைத்திய சாலைக்கு எடுத்து செல்லப்பட்டதாக காவத்துறை அதிகாரி அலெக்ஸ் லீ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இச் சம்பவம் பற்றி அலெக்ஸ் லீ மேலும் தெரிவிக்கையில் இன்று காலை 10 மணியளவில் பிறேம்ப்ளே(Brimley Rd) மற்றும் ஷெப்பர்ட்(Sheppard Ave.E) சந்திப்புக்கு அன்மித்த முராய் (Murray Ave) பகுதியிலிருந்து காவல்துறைக்கு கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து தாம் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றதாகவும் சம்பவ இடத்தில் இரு பெண்கள் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததாகவும் தெரிவித்தார்.
காயமடைந்த ஒருவர் வைத்திய சாலையில் சிகிக்சை பெற்று வருவதாகும் மற்றைய பெண் 38 வயதுடைய தீபா சீவரத்தினம் வைத்திய சாலையில் சிகிக்சை பயனளிக்காமல் மரணமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் இச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படுகின்ற சந்தேக நபர் பற்றிய தகவலை காவல் துறையினர் வெளியிட்டுள்ளனர்.
சந்தேக நபர் 5 அடி 10 அங்குலம் உயரத்தை உடைய கருப்பு நிறத்தவர் என்றும் அவர் வெளிர் நிறத்திலான காற்சட்டையும் கரிய நிறத்திலான மேலாங்கியையும் அணிந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது இவர் பற்றிய தகவல் அறிந்தவர்கள் காவல் துறைக்கு கீழ் வருகின்ற தொலைபேசிகளில் அழைத்து உதவுமாறு பொது மக்களை கேட்டுக் கொள்கிறார்கள் .

Reviewed by Author
on
March 16, 2020
Rating:

No comments:
Post a Comment