ஒரே நாளில் 627 பேர் பலி-கொரோனாவின் பரவலால் இத்தாலியில் பெரும் சோகம்
இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்தையும் தாண்டியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 627 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தமாக நான்காயிரத்து 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிந்தவர்களில் பெண்களை விட ஆண்களே அதிகமாகும் என தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்தது முதல் அதிக உயிரிழப்பு பதிவாகியுள்ள முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
இத்தாலியில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 021 ஆகும். கடந்த 24 மணி நேரத்தில் ஐயாயிரத்து 986 புதிய நோயாளர்கள் இனங் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகளாவிய ரீதியில் உயிரிந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 376 ஆக அதிகரித்துள்ளது.
சீனாவில் முதன்முறையாக கொரோனா வைரஸ் தொற்று இனங்காணப்பட்ட போதிலும், தற்போது அங்கு முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 48 மணி நேரத்தில் சீனாவில் உயிரிழப்புகள் பதிவாகவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் 627 பேர் பலி-கொரோனாவின் பரவலால் இத்தாலியில் பெரும் சோகம்
Reviewed by Author
on
March 21, 2020
Rating:

No comments:
Post a Comment