நாட்டின் பல பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் தற்காலிகமாக நீக்கம்! அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு -
கொழும்பு, கம்பஹா, புத்தளம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டத்தை தவிர்த்து ஏனைய பகுதிகளுக்கான ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.
அதற்மைய இன்று காலை 6 மணிக்கு நீக்கப்படும் இந்த ஊரடங்கு சட்டம் இன்று பிற்பகல் 2 மணியில் இருந்து நாளை காலை 6 மணி வரைம மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீண்டும் ஊரடங்கு சட்டம் நீக்கப்படும் போது அனைவரும் ஒன்றுக்கூடுவதனை தவிர்க்குமாறு பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவு பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நிலையில் இன்றையதினம் பொதுமக்கள் நடந்து கொள்ள வேண்டிய விதம் குறித்து அரசாங்கத் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அரசாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.
1. தேவையான விடயத்தின் அடிப்படையில் மாத்திரம் பொதுப்போக்குவரத்து சேவையை பயன்படுத்துதல்.
2. எல்லாச் சந்தர்ப்பத்திலும் இரண்டு நபர்களுக்கு இடையில் 1 மீற்றர் இடைவெளி தூரத்தைக் கடைபிடித்தல்.
3. அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக நீங்கள் வீட்டிலிருந்து வர்த்தக நிலையத்திற்கு மாத்திரம் செல்ல வேண்டும்.
4. வீட்டில் ஒரு நபர் மாத்திரம் வர்த்தக நிலையத்திற்கு செல்வதை வரையறுக்கவும்.
5. தனியார் வைத்திய ஆலோசனைகளை கடைபிடிக்கவும்.
6. வயோதிப நபர்களை வீட்டிலேயே தங்க வைக்கவும்.
7. பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக வர்த்தக நிலையங்களில் செலவிடும் காலத்தில் நபர்களுக்கு இடையில் 1 மீற்றர் இடைவெளி தூரத்தை பேணுங்கள்.
8. பொருட்களை கொள்வனவு செய்யும் பொழுது வர்த்தக நிலையங்களில் செலவிடும் காலத்தை வரையறை செய்யுங்கள்.
9. இந்த வர்த்தக நிலையங்களுள் கூடுதலானோர் உட்பிரவேசிப்பதை கட்டுப்படுத்துவதில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் முகாமையாளர், பாதுகாப்பு பிரிவினர் கவனம் செலுத்த வேண்டும்.
10. வெளியிடங்களுக்கு சென்று மீண்டும் வீட்டிற்கு வரும் பொழுது வழங்கப்பட்டுள்ள சுகாதார ஆலோசனைகள் மாத்திரம் கடைபிடித்து வீடுகளுள் பிரவேசிக்க வேண்டும்.
இவ்வாறு 10 கட்டளைகள் அடங்கிய ஒரு அறிப்பை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
எனவே மக்களே ஊரடங்கு தளர்த்தப்படும் சில மணித்தியாலங்களில் உங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி உங்களின் அத்தியாவசிய தேவைகளை மட்டும் பெற்றுக்கொள்ளுங்கள்.

நாட்டின் பல பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் தற்காலிகமாக நீக்கம்! அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு -
Reviewed by Author
on
March 23, 2020
Rating:
No comments:
Post a Comment