கொழும்பில் தேவாலயங்களுக்கு சிறப்பு அதிரடிப்படை பாதுகாப்பு!
கல்கிசை தொடக்கம் நீர்கொழும்பு வரையான கரையோரப் பிரதேசங்களில் உள்ள கிறிஸ்தவ தேவாலயப் பகுதிகளில் சிறப்பு பாதுகாப்பு திட்டம் ஒன்றை பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை நடைமுறைப்படுத்தவுள்ளது.
கல்கிசை தொடக்கம் நீர்கொழும்பு வரையான கரையோரப் பகுதிகளில் உள்ள தேவாலயங்களில், வழிபாட்டு நேரங்களில் இந்த சிறப்பு பாதுகாப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
தேவாலயங்கள் மற்றும் தேவாலயப் பகுதிகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பணிக்காக, சிறப்பு அதிரடிப்படையின் உந்துருளி அணியொன்றும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பகுதிகளில் நடமாடும் சந்தேக நபர்களை உந்துருளி அணியை சேர்ந்த சிறப்பு அதிரடிப்படையினர் சோதனைக்கு உட்படுத்துவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் தேவாலயங்களுக்கு சிறப்பு அதிரடிப்படை பாதுகாப்பு!
Reviewed by Author
on
March 12, 2020
Rating:
Reviewed by Author
on
March 12, 2020
Rating:


No comments:
Post a Comment