கொரோனா வைரஸ் பாதிப்பு - ஐ.நா. வெளியிட்ட மதிப்பீட்டு அறிக்கை -
உலகில் உள்ள 165 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 2 லட்சத்திற்கு அதிகமாகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்திற்கு அதிகமாகவும் அதிகரித்துள்ளது.
கொரோனா பீதியால் பல நாடுகளில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
விமானச் சேவைகள், புகையிரத சேவைகள், மற்றும் பஸ், டாக்சி உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துகளும் வெகு குறைவாகவே இயக்கப்படுவதால் பெருநகரங்களில் மக்களின் அவசியமற்ற போக்குவரத்து வெகுவாக குறைந்து காணப்படுகிறது.
மிகப்பெரிய வணிக வளாகங்கள், சினிமா திரையரங்குகள், மதுபான விடுதிகள், கேளிக்கை அரங்கங்கள், உணவகங்கள், விடுதிகள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள்... என அனைத்துக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சில நாடுகளில் சராசரியான பண நடமாட்டமும் அரசின் வருமானமும் சுருங்கிப் போகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் சுமார் இரண்டரை கோடி மக்கள் வேலைகளை இழப்பர் எனவும், இதன் எதிரொலியாக 3 கோடியே 40 லட்சம் அமெரிக்க டொலர்கள் அளவுக்கு வருமானத்தை இழக்க நேரிடும் என ஐக்கிய நாடுகள் சபைக்கான தொழிலாளர் நல அமைப்பு இன்று வெளியிட்ட மதிப்பீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த நிலையை களைவதற்காக சர்வதேச அளவில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து உருவாக்கும் கொள்கை முடிவின் மூலம் இந்த மதிப்பீட்டு எண்ணிக்கை வெகுவாக குறையலாம் என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு - ஐ.நா. வெளியிட்ட மதிப்பீட்டு அறிக்கை -
Reviewed by Author
on
March 19, 2020
Rating:

No comments:
Post a Comment