யாழ்ப்பாணம் உட்பட வடக்கு மாகாண மக்களுக்கு எச்சரிக்கை! வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் -
யாழ்ப்பாணம் உட்பட வட மாகாணம் முழுவதும் வீடுகளுக்குள் புகுந்து கைக்குண்டுகள் மற்றும் வாள்களை காட்டி கொள்ளையிடுவது, பெண்களை பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்குவது போன்ற குற்றங்களில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த நால்வர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விடயத்தை அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் கூறுகையில்,
சந்தேகநபர்களிடமிருந்து 2 கைக்குண்டுகள், 2 வாள்கள், கொள்ளையிடப்பட்ட நகைகள் மற்றும் 2 மோட்டார்சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தக் கும்பலை சேர்ந்த மேலும் பலர் வடக்கு மாகாணம் முழுவதிலும் பதுங்கியுள்ளனர்.
அச்சுவேலியில் கொள்ளைக் கும்பல் ஒன்று பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்திய தேடுதல் மற்றும் விசாரணையில் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து 2 கைக்குண்டுகள், 2 வாள்கள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டன.
இந்தக் கும்பல் சாவகச்சேரி, சுன்னாகம், அச்சுவேலி, கோப்பாய் மற்றும் மன்னார் பொலிஸ் பிரிவுகளில் இரவு வேளைகளில் வீடுகளுக்குள் புகுந்து வாள்களைக் காண்பித்து அச்சுறுத்தி நகைகளைக் கொள்ளையிட்டுள்ளது.
மேலும் பெண்கள் உள்ள வீடுகளில் பாலியல் துன்புறுத்தல்களையும் இந்தக் கும்பல் செய்துள்ளது. கொள்ளையிட்ட சுமார் 16 பவுண் நகைகளை நெல்லியடியிலுள்ள நகைக் கடையில் விற்பனை செய்துள்ளனர்.
கொள்ளையிட்ட நகை எனத் தெரிந்தும் அவற்றை வாங்கிய நகைக் கடைஉரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளைக் கும்பலின் முக்கியஸ்தர் ஏழாலையைச் சேர்ந்தவர்.
ஏனையோர் சிறுப்பிட்டி, சுன்னாகம், அச்சுவேலிப் பகுதிகளைச் சேர்ந்தோர். இந்தக் கும்பல் வடக்கு மாகாணம் முழுவதும் இயங்குகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 3-4 பேர் உள்ளனர்.
அவர்கள் ஒரு குழுவாக இணைந்து தமது இடங்களில் கொள்ளைகளில் ஈடுபடுவது விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள் ஐவரும் மல்லாகம் நீதிவான் முன்னிலையில் இன்று இரவு முற்படுத்தப்படவுள்ளனர்.
அவர்களை 48 மணிநேரம் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.
எனவே இது தொடர்பில் யாழ்ப்பாணம் உட்பட வட மாகாண மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் உட்பட வடக்கு மாகாண மக்களுக்கு எச்சரிக்கை! வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் -
Reviewed by Author
on
March 01, 2020
Rating:
Reviewed by Author
on
March 01, 2020
Rating:


No comments:
Post a Comment