கொரோனா வைரஸூக்கு எதிராக நடவடிக்கை! ஜனாதிபதி முன்னெடுத்துள்ள திட்டம் -
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விசேட நிதி ஒன்றை அமைத்துள்ளார்.
இந்த நிதியின் மூலம் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கவும், அது தொடர்பான சமூக நலன்புரி நிகழ்ச்சிகளை முன்னெடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இது கொவிட்-19 சுகாதாரநலன் மற்றும் சமூக பாதுகாப்பு நிதி என்ற பெயரில் அழைக்கப்படும். இந்த நிதிக்கு ஜனாதிபதி நிதியில் இருந்து 100 மில்லியன் ரூபாய்களை ஒதுக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்தநிலையில் குறித்த நிதிக்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் தமது நன்கொடைகளை வழங்கலாம்.
இதற்கான இலங்கை வங்கியின் 85737373 என்ற இலக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இலக்கத்துக்கு நன்கொடை நிதிகளை காசோலைகளாக அல்லது “டெலிகிராப்பிக் ட்ரான்ஸபர்”என்ற மின்னியல் பரிமாற்றத்தின் ஊடாக அனுப்பமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Reviewed by Author
on
March 24, 2020
Rating:

No comments:
Post a Comment