பெண்ணே விழித்து எழு!
பெண்ணே விழித்து எழு!
உலகைத் தாங்கும் உயர் படைப்பின்
உயிர்ப்பின் ஊற்றின் உறைவிடம் பெண்
தன்னை உருக்கி ஒளி வீசும்
தியாகத் தீபமாய் ஒளிர்பவள் பெண்!
பெண்ணே இலட்சியத் தீ மூட்டி
பொங்கும் அக்கினி நீராடு
முட்புதர்க் காட்டின் விதை போல
முட்டி மோதி முளைத்து விடு!
அவசர கம்பிச் சிறைகளுக்குள்
அடைபட கண்ணீர்ப் பூக்களல்ல
மீண்டும் மீண்டும் உயிர்த்து எழும்
மீட்சியில் பீனீஸ் பறவை நீ!
எரிக்கும் சுடரின் அனல் தரித்து
எரிமலை போலக் கிளர்ந்தெழும்பு
ஆதியும் அந்தமும் உனக்குள்தான்
அகிலம் வெல்வாய் உனை நம்பு!
எதிர்ப்புகள் உன்னைத் தகர்த்திடுமா
எறிகணை ஏந்தத் துணிந்து விடு
உலகைத் தினமும் வென்று விட
உன்னைச் சங்கமமாக்கிவிடு!
பெண்மை உலகின் பெரும் பேறு
பேரலை போலப் போராடு
கத்தும் கடலின் கருவறையைக்
காட்சிப் பொருளாய் மாற்றிவிடு
இருளைக் கிழித்து ஒளியேற்றி
இனியதோர் விடியலைப் பெற்று விடு!
பொறுத்தது போதும் பூமகளே
புதுயுகம் காணப் பயணப்படு!
கவிதாயினி அன்பழகி கஜேந்திரா
பெண்ணே விழித்து எழு!
Reviewed by Author
on
March 08, 2020
Rating:

No comments:
Post a Comment