மன்னாரில் விபத்தில் இறந்த சகோதரிகளின் இரத்தம் காயும் முன்னரே விபத்தை ஏற்படுத்தியவரை பிணையில் எடுத்த பாதிரியார் ஞானப்பிரகாசம் குழுவினர்
மன்னார்-மதவாச்சி பிரதான வீதி,பரப்பாங்கண்டன் பகுதியில் கடந்த வியாழக்கிழமை (9) மதியம் 2.30 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் சகோதரிகளான இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
அவர்களுடைய சடலம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை கட்டையடம்பன் பகுதியில் நல்லடக்கம் செய்வதற்கு முன்னரே விபத்தை ஏற்படுத்திய நபர் மன்னார் பதில் நீதவானினால் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளமை குறித்து அக்கிராம மக்களும் குடும்ப உறவுகளும் ஆதங்கம் தெரிவித்துள்ளர்.
நேற்று முன் தினம் வியாழக்கிழமை மாலை மன்னார் -மதவாச்சி பிரதான வீதி, பரப்பாங்கண்டல் பகுதியில் இடம் பெற்ற கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இரண்டு சகோதரிகளும் உயிரிழந்தனர்.
இந்த நிலையில் குறித்த இரு பெண்களின் இறுதி கிரிகைகள் நேற்று வெள்ளிக்கிழமை (10) மாலை 5 மணியளவில் கட்டையடம்பன் பகுதியில் உள்ள அவர்களது இல்லத்தில் இடம் பெற்று பொது மையானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
எனினும் குறித்த இரு சகோதரிகளின் இறுதி அஞ்சலி மற்றும் நல்லடக்கம் செய்வதற்கு முன் விபத்தை ஏற்படுத்திய குறித்த நபரை மன்னார் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்துள்ளது..
மன்னார் நீதிமன்றத்திற்கு பதிலாக மன்னார் பதில் நீதவானின் இல்லத்தில் ஆஜர் படுத்தப்பட்டார் வெள்ளிக்கிழமை மதியம் 2 மணியளவில் பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ முன்னிலையில் விபத்தை ஏற்படுத்திய நபர் பொலிஸாரினால் முன்னிலைப் படுத்தப்பட்டார்.
இதன் போது பாதர் ஞானப்பிரகாசம் சேர்ந்து சட்டத்தரனி அர்ஜுன் இணைந்து குறித்த நபருக்கு பிணை வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொண்டதாகவும் குறித்த பிணை வழங்குவது தொடர்பாக மன்னார் பிரந்திய பொலிஸ் மற்றும் பொறுப்பதிகாரி கடும் எதிர்பு தெரிவித்திருந்தனர்.
எனினும் அந்த எதிர்ப்பை கவனத்தில் கொள்ளாது குறித்த நபருக்கு பதில் நீPதவான் பிணை வழங்கி உள்ளார்.
.
குறித்த இரு சகோதரிகளின் இறுதிக் கிரிகைகள் இடம் பெறுவதற்கு முன்னதாகவே விபத்தை ஏற்படுத்திய நபருக்கு பொலிஸாரின் கடும் எதிர்ப்பை மீறியும் மதகுரு ஒருவரின் ஆதரவுடன் பிணை வழங்கப்பட்டமையால் இறந்த பெண்களின் குடும்பத்தினர் பல்வேறு விதமான எதிர்புகளை வெளிப்படுத்தி உள்ளனர்.
மேலும் உயிரிழந்த குறித்த இரு பெண்களும் அரச ஊழியர்களாக உள்ள போதும் அவர்களின் மரணத்திற்கு ஆரம்பத்திலேயே நீதி கிடைக்கவில்லை என குடும்ப உறவுகள் கவலை தெரிவித்துள்ளனர்.
மன்னாரில் விபத்தில் இறந்த சகோதரிகளின் இரத்தம் காயும் முன்னரே விபத்தை ஏற்படுத்தியவரை பிணையில் எடுத்த பாதிரியார் ஞானப்பிரகாசம் குழுவினர்
Reviewed by Admin
on
April 11, 2020
Rating:

1 comment:
அன்பான கடவிளே நான் உன்னை என் இதயத்தில் சுமப்பவள் அப்பா, எனக்கு இல்லாத ஒரு தந்தையை நீங்கள் நினைவூட்டினீர்கள். உங்களை சந்தித்ததற்கு நான் பாக்கியசாலியாகவுள்ளேன். என் கடவிளே தற்போது நடந்து முடிந்த இரண்டு சகோதரிகளின் இறப்பின் துயரத்தை நினைத்து பதகழித்துக்கொண்டி௫க்கின்ற இந்தக் குடும்பத்திற்கு உங்களால் முடிந்த ஒ௫ அமைதியான வாரத்தையை நிரந்தரமாக கொடுத்து அவர்களின் உள்ளத்தில் ஒ௫ ஓய்வைக் கொடுத்த௫ளும் அப்பா. Amen
சுய இலாபத்திற்காக தொழில் புரியும் எந்த நபராக இ௫ந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தி
அவர்களுக்கான தண்டனையை கொடுப்பது உமது கையில் மட்டும்தான் உள்ளது என்பதை நீர்
ஒ௫போதும் மறக்கமாட்டீர் என்று நம்புகின்றேன் கடவிளே.
Post a Comment