சவுதி அரேபிய அரச குடும்பத்தில் 150 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு:
சவுதி அரசர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர் பின் சல்மான் ஆகிய இருவரும் மருத்துவர்களின் ஆலோசனைப் படி தனிமைப்படுத்தலில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
அரச குடும்பத்து உறுப்பினர்களுக்கு சிகிச்சை அளித்துவரும் ரியாத்தில் அமைந்துள்ள கிங் பைசல் சிறப்பு மருத்துவமனை நிர்வாகிகளுக்கு ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும்,
இதனால் 500 படுக்கைகளை தயார் செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கிங் பைசல் சிறப்பு மருத்துவமனை எப்போதும் தயார் நிலையிலேயே இருப்பதாக நிர்வாகிகள் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, கிங் பைசல் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சாதாரண உறுப்பினர்களை வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனிடையே 84 வயதான அரசர் சல்மான் ஜெட்டா அருகாமையில் உள்ள தீவு அரண்மனைக்கு மாற்றப்பட்டுள்ளார் எனவும், இன்னொரு தீவுக்கு பட்டத்து இளவரசர் சல்மான் சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சவுதி அரச குடும்பத்தை பொறுத்தமட்டில் சுமார் 15,000 உறுப்பினர்களில் இளவரசிகள் மட்டும் ஆண்டுக்கு ஆயிரம் முறையேனும் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று வருவது வழக்கமாக கொண்டுள்ளனர்.
அதுபோன்று ஐரோப்பிய நாடுகளில் சென்று வந்த எவரேனும் அரச குடும்பத்தில் கொரோனா நோயை பரப்பியிருக்கலாம் என கூறப்படுகிறது.
மொத்தம் 33 மில்லியன் மக்கள் தொகை கொண்ட சவுதி அரேபியாவில் இதுவரை 2,932 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை சிகிச்சை பலனின்றி 41 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. சவுதி அரச குடும்பத்தை பொறுத்தமட்டில் முன்வரிசை உறுப்பினர்கள் அல்லது அவரது குடும்பத்தினர்கள் எவருக்கும் பாதிப்பு இல்லை என கூறப்படுகிறது.
சவுதி அரேபிய அரச குடும்பத்தில் 150 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு:
Reviewed by Author
on
April 10, 2020
Rating:

No comments:
Post a Comment