வடமாகாணத்தில் மன்னார் மாவட்டம் 1ம் இடத்தினையும் பெற்று சாதனை-படங்கள்
2019ம் ஆண்டு க.பொ.த ச/த பரீட்சைப் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையின் 25 மாவட்டங்களையும் நோக்குமிடத்து யாழ்ப்பாண மாவட்டம் 19ம் நிலையில் உள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கணிப்பில் எடுத்துக் கொள்ளப்பட்ட 3 விடயங்களாவன:
1. க.பொ.த உயர் தரத்திற்குத் தெரிவான மாணவர்களின் வீதம்
2. கணிதம், மொழி உட்பட 6 பாடங்களுக்கு (மொத்தமாக 9 பாடங்களில்) மேல் சித்தியடைந்த மாணவர்கள் வீதம்
3. எந்தப் பாடத்திலும் சித்தியடையாத மாணவர்கள் வீதம்.
இதனடிப்படையில்........... தேசிய ரீதியில் 07ம் இடத்தினையும் வடமாகாணத்தில் 1ம் இடத்தினையும் பெற்று சாதனை புரிந்துள்ளது.
- மன்னார் 7ம் இடத்திலும்,
- அம்பாறை 10ம் இடத்திலும்,
- மட்டக்களப்பு 18ம் இடத்திலும்,
- யாழ்ப்பாணம் 19ம் இடத்திலும்,
- வவுனியா 21ம் இடத்திலும்,
- திருகோணமலை 23ம் இடத்திலும்,
- முல்லைத்தீவு 24ம் இடத்திலும்
- கிளிநொச்சி 25ம் இடத்திலும் உள்ளன.
மன்னார் மாவட்ட மாணவர்கள் சிறப்பான பெறுவேறுகளைப் பெற்றுள்ள அதேவேளை வடக்கிலுள்ள மற்ற மாவட்டங்களில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்பதையே இத்தரவுகள் காட்டுகின்றன. இருப்பினும் இச்சாதனைக்கு உறுதுணையாக இருந்த மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் அதிபர்கள் கோட்டகல்விபணிப்பாளர்கள் வலையக்கல்விப்பணிப்பாளர்கள் கல்வி உயர் அதிகாரிகள் கல்வியமைச்சுடன் கல்விச்சமூகம் அனைவருக்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்திப்பாராட்டுகின்றோம்.
வடமாகாணத்தில் மன்னார் மாவட்டம் 1ம் இடத்தினையும் பெற்று சாதனை-படங்கள்
Reviewed by Author
on
April 29, 2020
Rating:

No comments:
Post a Comment