மட்டக்களப்பு-காத்தான்குடி சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
மட்டக்களப்பு-காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் உள்ள கொரோனா தொற்று சிகிச்சை நிலையத்தில் 27 பேர் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர்களில் 25 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதிப்படுத்தபடுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கந்தக்காடு தனிப்படுத்தல் முகாமில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் அடிப்படையில் இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களில் 25 பேர் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், இரண்டு சிறுவர்களுக்கு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகம் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, அண்மையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலை கொரோனாசிகிச்சைப்பிரிவாக மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு-காத்தான்குடி சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!
Reviewed by Author
on
April 21, 2020
Rating:
Reviewed by Author
on
April 21, 2020
Rating:


No comments:
Post a Comment