பிரித்தானிய மகாராணியாருக்கு 94ஆவது பிறந்தநாள்:
ஆயிரக்கணக்கானோரை பிரித்தானிய கொரோனாவுக்கு பலி கொடுத்துவிட்ட நிலையில், நாடே சமூக விலகல் கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதால், மகாராணியாருடன் அவரது கணவர் தவிர வேறு யாரும் இணைந்து பிறந்தநாள் கொண்டாட முடியாத ஒரு சூழல் ஏற்பட்டுவிட்டது.
இளவரசர் வில்லியம், தன் பாட்டியுடன் தானும் தன் மனைவியும் நிற்கும் ஒரு படத்தை வெளியிட்டு தன் பிறந்தநாள் வாழ்த்துக்களை மகாராணியாருக்கு தெரிவித்துக்கொண்டுள்ளார்.
பேரன் ஹரி அமெரிக்காவில் இருப்பதால், அவர்களுக்கு பிரித்தனியாவுக்குப் பிறகுதான் சூரியன் உதிக்கும் என்பதால், இன்னமும் அவரது வாழ்த்துக்கள் வந்து சேரவில்லையாம்.
மகாராணியாருக்கு 94ஆவது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என இளவரசர் சார்லஸ் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டுள்ளார்.
தனது பிறந்தநாளையொட்டி துப்பாக்கி குண்டுகள் முழங்க வாழ்த்தும் ராணுவ மரியாதையை, கொரோனா உயிரிழப்புக்களை ஏற்படுத்தியதால் இந்த வருடம் வேண்டாம் என மகாராணியார் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.


பிரித்தானிய மகாராணியாருக்கு 94ஆவது பிறந்தநாள்:
Reviewed by Author
on
April 22, 2020
Rating:

No comments:
Post a Comment