'வைரஸ் இப்போது விற்பனைக்கு' -கிரிக்கெட் வீரர் அஸ்வின் பதிவிற்கு மக்கள் காட்டம் -
கிரிக்கெட் வீரர் அஸ்வின் சென்னையில் ஒரு பகுதியில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பதை குறிப்பிட்டு ஒரு புகைப்படம் வெளியிட்டார். அந்த பதிவில் "வைரஸ் இப்போது விற்பனைக்கு. நாம் அதை வாங்கலாம் அல்லது மற்றவர்களுக்கு பகிர்ந்து அளிக்கலாம். பயங்கரமான நேரம் வந்து கொண்டு இருக்கிறது" என குறிப்பிட்டு இருந்தார்.
அதாவது மக்கள் சமூக இடைவெளி கடைபிடிக்காமல், சிலர் முகக்கவசம் அணியாமல் இருப்பதால் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாகவும், இவர்கள் வைரஸை பரப்ப வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்டு இருக்கிறார் அஸ்வின்.
The virus is on sale now. We can buy it or just share it with people living with us. 🦠 Scary times ahead. pic.twitter.com/QAii932qF7— lets stay indoors India 🇮🇳 (@ashwinravi99) April 25, 2020
தனக்கு எதிராக பதில் சொன்னவர்களுக்கு அஸ்வினும் விடாப்பிடியாக பதில் அளித்து இருப்பதால் இந்த கருத்து மோதல் ட்விட்டரில் சூடு பிடித்துள்ளது. ஆயிரக்கணக்கில் ட்விட்டர்வாசிகள் அவருக்கு பதில் அளித்துள்ளனர். அரசு இரு நாட்களுக்கு முன்பே கூறி இருந்தால் கூட மக்கள் கூட்டம் இத்தனை அதிகமாக இருக்காது என சிலர் கூறி உள்ளனர்.
'வைரஸ் இப்போது விற்பனைக்கு' -கிரிக்கெட் வீரர் அஸ்வின் பதிவிற்கு மக்கள் காட்டம் -
Reviewed by Author
on
April 27, 2020
Rating:

No comments:
Post a Comment