சட்டவிரோத விற்பனையில் ஈடுபட்ட வியாபார நிலையம் மீது வழக்கு தாக்கல்
ஊரடங்கு சட்டம் நேற்றைய தினம் மன்னார் மாவட்டத்தில் தளர்த்தப்பட்ட நிலையில் அத்தியாவசிய பெருளான அரிசியை அதிகவிலைக்கு விற்ற மொத்த வியாபார நிலையம் மீது மன்னார் பாவனையாளர் அதிகாரசபையினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நேற்றையதினம் மக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு என அரசாங்கத்தினால் ஊரடங்கு சட்டம் காலை 6.30 தொடக்கம் மாலை 4.00 மணி வரை தளர்த்தப்பட்ட நிலையில் மக்களின் அவசரநிலையை சாதகமாக பயன்படுத்தி கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக அரிசி விற்பனையில் ஈடுபட்ட மன்னார் பிரபல வர்தக நிறுவனத்தின் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் அரசாங்கத்தினால் 100 ரூபாய் நிர்ணய விலையாக்கப்பட்ட சமண்டீனை விற்பனை செய்யாமல் பதுக்கிவைத்தமைக்காகவும் குறித்த வியாபார நிலையம் மீது வழக்கு தாக்கல் செய்யபட்டதுடன் பதுக்கப்பட்ட சமன் டீன்களை நிர்ணய விலைக்கு விற்பனை செய்வதற்காக மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த வர்த்தக நிலையமே கடந்த வார ஊர்டங்கு சட்ட தளர்வு காலப்பகுதியில் பருப்பை 170 ரூபாக்கு விற்பனை செய்ததுடன் பில் அதாவது பற்று சீட்டில் கட்டை என எழுதி சட்டநடவடிக்கைகளில் இருந்து தப்பியதும் குறிப்பிடதக்கது.
இவ் மொத்த வியாபரிக்கே மன்னார் மாவட்டத்தில் ஊரடங்கு காலப்பகுதியில் ஏனைய மாவட்டங்களில் இருந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்கான விசேட அனுமதி வழங்கப்பட்டிருப்பதுடன் குறித்த வியாபரி அவ் விசேட அனுமதியை பயன்படுத்தி இவ்வாறன செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
சட்டவிரோத விற்பனையில் ஈடுபட்ட வியாபார நிலையம் மீது வழக்கு தாக்கல்
Reviewed by Author
on
April 11, 2020
Rating:

No comments:
Post a Comment