அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் இன்னும் கொரோனா ஆபத்து நீங்கவில்லை - எச்சரிக்கும் சுகாதார பணிப்பாளர் -


இலங்கையில் கொரோனா வைரஸின் ஆபத்து இன்னமும் நீங்கவில்லை என சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

சூழ்நிலைகளுக்கு ஏற்ப சரியான தீர்மானங்களை எடுத்தமையினால் நாட்டில் கொரோனா ரைவஸ் பரவலை முடிந்தளவு கட்டுப்படுத்த முடிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் மேற்கொள்ளப்படும் அனைத்து செயற்பாடுகளிலும் தொடர்ந்து ஆபத்துக்கள் உள்ளதென்பதனை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ், சிங்கள புத்தாண்டின் போது ஆபத்தை நினைவில் வைத்துக் கொண்டு அனைவரும் செயற்பட வேண்டும் என அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதேவேளை கொரோனா வைரஸின் தொற்று கடந்த சில தினங்களில் திடீரென உயர்வடைந்துள்ளன. தற்போது வரையில் 210 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் 56 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர்.
இலங்கையில் இன்னும் கொரோனா ஆபத்து நீங்கவில்லை - எச்சரிக்கும் சுகாதார பணிப்பாளர் - Reviewed by Author on April 13, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.