கொரோனா வைரஸ் குறித்து விசேட நிபுணர்கள் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்! -
இந்த வைரஸ் சீனாவின் ஹூஹான் நகரில் இருந்து பரவ ஆரம்பித்திருக்காது என்பது இவர்களின் நம்பிக்கை.
நோயாளிகளின் எண்ணிக்கையை பூஜ்ஜியம் வரை பின்நோக்கி கொண்டு செல்லும் வரைப்பட முறைமையின் மூலம் இந்த ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸின் ஆரம்பத்தை தேட முயற்சித்துள்ளனர்.
இவர்கள் சீனாவில் இருந்து அவுஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் உலகில் ஏனைய நாடுகளை தமது மறு ஆய்வுக்கான வரைப்படத்தில் உள்ளடக்கியுள்ளனர்.
கொரோனா வைரஸின் வெவ்வேறு மரபணுக்கள் (ஒரு செல்லில் உள்ள முழு மரபணு செயலாக்க அமைப்பு) உலகில் பல இடங்களில் காணப்படுகின்றன. இவற்றில் மூன்று மரபணுக்கள் தொடர்பாக ஆய்வாளர்கள் கூடிய கவனத்தை செலுத்தியுள்ளனர்.
கொரோனா வைரஸ் வகைக்குரிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரபணுக்களை பயன்படுத்தி ஒரு வலையமைப்பை உருவாக்கியுள்ள ஆய்வாளர்கள், இந்த வைரஸ் பரவலானது செப்டம்பர் 13ம் திகதியில் இருந்து டிசம்பர் 7ம் திகதி இடையிலான காலத்தில் ஆரம்பித்திருக்கலாம் என நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் உண்மையில் எங்கியிருந்து உருவானது என்பதை கண்டறிவது எதிர்காலத்தில் இந்த வைரஸ் தொற்று நோயை தடுக்க மிக முக்கியமானது என நிபுணர்கள் குழுவின் தலைவர் கலாநிதி பீட்டர் போஸ்டர் தெரிவித்துள்ளார்.


கொரோனா வைரஸ் குறித்து விசேட நிபுணர்கள் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்! -
Reviewed by Author
on
April 21, 2020
Rating:
No comments:
Post a Comment