ஜுன் இறுதியில் பொதுத்தேர்தல்?- தேர்தல் ஆணைக்குழு பரிசீலனை -
நாடாளுமன்றத் தேர்தலை ஜுன் மாதத்தின் இறுதிப் பகுதியில் நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு பரிசீலித்து வருகின்றது என அரசியல் கட்சி வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
தேர்தல் தொடர்பான புதிய அறிவிப்பு மே மாதம் ஆரம்பத்தில் அறிவிக்கப்படின் தேர்தல் பரப்புரைக்கு 45 நாட்கள் வழங்கப்பட வேண்டும்.
அந்த நாட்களைக் கருத்தில்கொண்டு தேர்தல் திகதி தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிலைப்பாட்டை ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய பகிரங்கமாக அறிவிப்பார் எனவும் கூறப்படுகின்றது.
ஜுன் இறுதியில் பொதுத்தேர்தல்?- தேர்தல் ஆணைக்குழு பரிசீலனை -
Reviewed by Author
on
April 14, 2020
Rating:
Reviewed by Author
on
April 14, 2020
Rating:


No comments:
Post a Comment