ஜூலையில் ஐ.பி.எல் நடத்த திட்டம்! பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கலாம்... -
13 ஐ.பி.எல் தொடர் மார்ச் மாதம் தொடங்க இருந்தது. இந்நிலையில்,கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. போட்டிகள் ஏப்ரல்15ஆம் திகதிக்கு பின் நடத்தப்படுவது குறித்து திட்டமிடப்படும் என்று பிசிசிஐ அறிவித்தது.
இந்நிலையில், ஊரடங்கை நீட்டிக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், போட்டிகள் நடத்தப்படுமா என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.
அதுகுறித்து ஆலோசனை நடத்திய பிசிசிஐ, ஐ.பி.எல் போட்டிகளை ஜூலையில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இந்த போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி இருக்காது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜூலையில் ஐ.பி.எல் நடத்த திட்டம்! பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கலாம்... -
Reviewed by Author
on
April 11, 2020
Rating:

No comments:
Post a Comment