தம்மை கைது செய்வதனை தடுக்குமாறு கோரி ரிசாட் பதியூதீன் நீதிமன்றில் மனு -
தம்மை கைது செய்வதனை தடுக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதின் உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
பதில் காவல்துறை மா அதிபர், குற்ற விசாரணைப் பிரிவின் பிரதிக் காவல்துறை மா அதிபர், குற்ற விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அரசாங்க வாகனமொன்றை பயன்படுத்தி புத்தளம் பிரதேசத்தில் வாக்காளர்களை வாக்குச் சாவடிக்கு அழைத்துச் சென்றதாக குற்றம் சுமத்தி குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விசாரணைகளின் அடிப்படையில் தம்மை கைது செய்வதற்கு குற்ற விசாரணைப் பிரிவினர் முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்துடன் தமக்கு எவ்வித தொடர்பும் கிடையாது என சுட்டிக்காட்டும் முன்னாள் அமைச்சர் ரிசாட், காவல்துறையினர் தம்மை கைது செய்வதற்கு திட்டமிட்ட அடிப்படையில் முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நடவடிக்கையினால் தமது அடிப்படை உரிமை மீறப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
எனவே, வழக்கு விசாரணை நடாத்தி இறுதித் தீர்ப்பு அளிக்கப்படும் வரையில் தம்மை கைது செய்வதனை தடுக்கும் வகையிலான உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு உச்ச நீதிமன்றிடம் அடிப்படை உரிமை மனுவொன்றின் மூலம் முன்னாள் அமைச்சர் ரிசாட் கோரியுள்ளார்.
தம்மை கைது செய்வதனை தடுக்குமாறு கோரி ரிசாட் பதியூதீன் நீதிமன்றில் மனு -
Reviewed by Author
on
April 30, 2020
Rating:

No comments:
Post a Comment