அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையிலேயே வெளியே செல்ல அனுமதி -
ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதியில் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்ல வேண்டுமாயினும் சில விதிகளை பின்பற்ற வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, திங்கட் கிழமைகளில் தேசிய அடையாள அட்டையின் இறுதி இரண்டு இலங்கங்கள் 1 அல்லது 2 ஆக காணப்படுவோர் மட்டுமே வெளியே அனுமதிக்கப்படுவர்.
செவ்வாய்க் கிழமைகளில் தேசிய அடையாள அட்டையின் இறுதி இரண்டு இலங்கங்கள் 3 அல்லது 4 ஆக காணப்படுவோர் மட்டுமே வெளியே அனுமதிக்கப்படுவர்.
புதன் கிழமைகளில் தேசிய அடையாள அட்டையின் இறுதி இரண்டு இலங்கங்கள் 5 அல்லது 6 ஆக காணப்படுவோர் மட்டுமே வெளியே அனுமதிக்கப்படுவர்.
வியாழக் கிழமைகளில் தேசிய அடையாள அட்டையின் இறுதி இரண்டு இலங்கங்கள் 7 அல்லது 8 ஆக காணப்படுவோர் மட்டுமே வெளியே அனுமதிக்கப்படுவர்.
வெள்ளிக் கிழமைகளில் தேசிய அடையாள அட்டையின் இறுதி இரண்டு இலங்கங்கள் 9 அல்லது 0 ஆக காணப்படுவோர் மட்டுமே வெளியே அனுமதிக்கப்படுவர்.
உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் போன்ற மிகவும் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மட்டுமே இவ்வாறு வெளியே செல்ல அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் அருகாமையில் உள்ள கடைகளில் தேவையான பொருட்களை முடிந்தளவு சீக்கிரம் கொள்வனவு செய்து வீடு திரும்ப வேண்டுமென பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
கொரோன வைரஸ் தொற்று பரவுவதனை கட்டுப்படுத்துவதற்கு இவ்வாறான சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையிலேயே வெளியே செல்ல அனுமதி -
Reviewed by Author
on
April 26, 2020
Rating:
Reviewed by Author
on
April 26, 2020
Rating:


No comments:
Post a Comment