பதவி நீக்கப்பட்டார் சரத் பொன்சேகா! ரணில் நடவடிக்கை -
ஐக்கிய தேசிய கட்சியின் களனி தேர்தல் தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து முன்னாள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நீக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், களனி தேர்தல் தொகுதி புதிய அமைப்பாளராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
சரத் பொன்சேகா, சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தமையினால் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை மேற்படி நியமனத்தை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவி நீக்கப்பட்டார் சரத் பொன்சேகா! ரணில் நடவடிக்கை -
Reviewed by Author
on
April 22, 2020
Rating:

No comments:
Post a Comment