அண்மைய செய்திகள்

recent
-

அனைத்து நோய்களை விரட்டியடிக்கும் சிவனார் வேம்பு மூலிகைச்செடி!


">சிவனார் வேம்பு மூலிகைச்செடி மிகவும் மருத்துவ குணம் கொண்ட சொடியாகும். இதன் பெயரே இதன் மகத்துவத்தை சொல்லிவிடும். குருஞ்செடியாக தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் வளர்ந்தாலும், செம்மண் பகுதிகளில் செழித்து வளரக்கூடியது.

தன்மைமிக்க சிவனார் வேம்பு செடி, சிறிய இலைகளை உடையது. இதன் பூக்கள், காய்கள், தண்டு மற்றும் வேர் உள்ளிட்ட அனைத்து பாகங்களும், அளப்பரிய மருத்துவ குணங்களை கொண்டது. இச்செடியின் வேர் தான் மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

நமது அறியாமையால் மருத்துவ குணம் தெரியாமல் அழிந்த செடிகளில் சிவனார் வேம்பும் ஒன்று. “செவ்விய மேனி (தண்டு)… ஊதா நிறம் பூசிய சிவந்த இதழ்கள் (மலர்கள்)… பசுமையான சிறுசிறு கரங்கள் (இலைகள்)…” எனத் தகதகப்போடு ஒளிவீசும் மூலிகை ‘சிவனார் வேம்பு!’ ‘சிவனான வேம்புதனைச் செப்பக்கேளு செந்தணலின் மேனியாஞ்…’ -சிவனார் வேம்பு தாவரத்துக்கான அடையாளத்தைச் சுட்டிக்காட்டும் பாடல் வரி இது.

‘காந்தாரி’, ‘அன்னெரிஞ்சான் பூண்டு’, ‘இறைவன வேம்பு’ ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகிறது. தாவரத்தைப் பறித்த அன்றே உலர்த்தாமல் எரித்தாலும் புகையைக் கக்கும் மூலிகை இது.
இதன் காரணமாக அன்னெரிஞ்சான் (அன்றே எரிந்தான்) பூண்டு எனும் வழக்குப் பெயர் உருவாகியிருக்கிறது. சிவன் என்றால் ‘நெருப்பு’ என்ற ஆன்மிகத் தத்துவார்த்த அடிப்படையில், எரியும் தன்மையுடையதால் ‘சிவனார்’ வேம்பு என்று பெயர் வந்தது. வெப்பத்தை உண்டாக்கும் மூலிகைச் செடிகூட!

இதன் தண்டில் வெள்ளி தூவியதைப் போன்ற ரோம வளரிகள் காணப்படும். மிகச் சிறிய அளவிலான முட்டை வடிவ இலைகளோடு செம்மண்ணில் வளரும். பனை மரங்கள் இருக்கும் இடத்தில் இச்செடிகள் அதிக அளவில் தென்படும்.
முழுத் தாவரத்தையும் காயவைத்துப் பொடித்து கற்கண்டு சேர்த்து அரைத் தேக்கரண்டி அளவு பாலில் கலந்து சாப்பிட்டால் நாட்பட்ட நோய்கள் குணமாகும்.
இதன் வேரை வாயில் போட்டு மென்றால் வாய்ப்புண், பல்வலி சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

பல்வலிக்கு இதன் வேர் சிறந்த மருந்து. இன்றும் பழங்குடியினர் இந்த செடியின் வேர்களை பயன்படுத்துகின்றனர்.
இச்செடி புற்றுநோய் செல்களின் பெருக்கத்தை தடுக்கிறது.
கல்லீரலில் ஏற்படும் பாதிப்புகளை இந்த செடி அரணாக இருந்து தடுக்கிறது.
பாக்டீரியாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் செயல்பாடும் இதற்கு உண்டு. தோல் நோய்களை குணப்படுத்தும்.
வலிநிவாரணி, வீக்க முறுக்கி செய்கைகள், மூட்டு நோய்களுக்கான மருந்தாக பயன்படுத்தலாம்.

அனைத்து நோய்களை விரட்டியடிக்கும் சிவனார் வேம்பு மூலிகைச்செடி! Reviewed by Author on April 12, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.