படையினருக்கு ஒருபோதும் பாடசாலைகளை வழங்க முடியாது! -
இது தொடர்பில் அவர் அனுப்பிவைத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் கூறியதாவது,
“அரசு தற்போது பாடசாலைகளிலும், ஏனைய கல்வி நிறுவனங்களிலும் இராணுவத்தினரைத் தங்கவைப்பதற்கான செயற்பாட்டை முன்னெடுத்து வருவதாக மக்கள் மத்தியில் அச்சநிலை ஏற்பட்டுள்ளது.
தென்னிலங்கையில் பாடசாலைகள் சிலவற்றை - இராணுவத்தினர் சில தேவைகளுக்கு இதற்கு முன்னர் பயன்படுத்தியிருந்தாலும் கூட தற்போது கொரோனா நோய் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் இராணுவத்தினர் தங்கவைக்கப்படுவதை எதிர்த்து கோப்பாய் தேசிய கல்வியியற்கல்லூரி, கோப்பாய் ஆசிரியர் கலாசாலை போன்ற கல்வி நிறுவனங்களைச் சூழவுள்ள மக்களால் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றுள்ளன.
எனவே, இந்த அச்சமான சூழ்நிலையில் தனிமைப்படுத்துதல் மற்றும் தொற்றைக் கட்டுப்படுத்தல் என்னும் போர்வையில் பாடசாலைகளைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவே மக்கள் மத்தியில் அச்ச நிலை உருவாகின்றது.
இந்தச் சூழலில் பாடசாலைகளையும் கல்வி நிறுவனங்களையும் இராணுவத்தினருக்கு வழங்குவதை அரசு நிறுத்த வேண்டும்.
நாடு பூராகவும் 43 இலட்சம் மாணவர்கள் கல்வி கற்றுவரும் நிலையில் பாடசாலைகளைச் சூழவுள்ள சமூகத்தினருக்கு அச்சமூட்டும் வகையில் செயற்பாடுகள் நடைபெறுவதை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
மக்கள் செறிவு நிறைந்த இடங்களில் அமைந்த பாடசாலைகள் மற்றும் நிறுவனங்களில் இத்தகைய தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைக்க முயற்சிப்பதாகவே தகவல்கள் கிடைத்துள்ளன.
குறிப்பாக வடக்கு மாகாணக் கல்வி அமைச்சிடம் வடமராட்சி, சாவகச்சேரி, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் பாடசாலைகள் சிலவற்றை வழங்குமாறு இராணுவத்தினர் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இவ்வாறு கொரோனா நோய்த்தொற்று தனிமைப்படுத்தல் நிலையங்களுக்குப் பாடசாலைகளையும், கல்வி நிறுவனங்களையும் வழங்குவதை இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்க்கின்றது.
“தனிமைப்படுத்தல் நிலையங்களாகப் பாடசாலைகள் மாற்றப்படாது” எனக் கல்வி அமைச்சு அறிவித்துள்ள நிலையில் இதன் உண்மைத்தன்மைகளை கல்வி அமைச்சு முறையான அறிக்கையூடாக வெளிப்படுத்த வேண்டும்.
அச்சுறுத்தல் நிறைந்த இந்தச் சூழலில் பாடசாலைகளை இராணுவத்தினருக்கு வழங்கும் செயற்பாட்டைக் கல்வி அமைச்சு உடன் நிறுத்த வேண்டும்" - என்றுள்ளது.
படையினருக்கு ஒருபோதும் பாடசாலைகளை வழங்க முடியாது! -
Reviewed by Author
on
April 29, 2020
Rating:
Reviewed by Author
on
April 29, 2020
Rating:


No comments:
Post a Comment