இதயத்தை ஈட்டியால் குத்தியது போன்று இருந்தது... தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் வேதனை -
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், முதலாவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான ஏலம் 2008-ம் ஆண்டில் நடந்தபோது, நான் அவுஸ்திரேலியாவில் விளையாடிக் கொண்டிருந்தேன்.
அப்போது இந்திய அணிக்காக ஆடிக்கொண்டிருந்த நான், தமிழகத்தின் முன்னணி வீரராக இருந்ததால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிச்சயம் என்னை ஏலத்தில் எடுக்கும் என்று நம்பினேன்.
அவர்கள் என்னை கேப்டனாக நியமிப்பார்களா? இல்லையா? என்பது மட்டுமே எனக்குள் அப்போது எழுந்த கேள்வி.
ஆனால் ஆச்சரியம் அளிக்கும் வகையில் முதல் வீரராக விக்கெட் கீப்பர் டோனியை 1.5 மில்லியன் அமெரிக்க டொலருக்கு (தற்போதைய இந்திய மதிப்பில் ஏறக்குறைய ரூ.11.30 கோடி) ஏலம் எடுத்தனர். அச்சமயம் டோனி எனது பக்கத்தில்தான் உட்கார்ந்து இருந்தார். தன்னை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தேர்வு செய்யப்போகிறது என்பதை என்னிடம் கூட அவர் சொல்லவில்லை.
ஒரு வேளை அவருக்கு முன்கூட்டி தெரியாமல் இருந்திருக்கலாம். சென்னை அணி நிர்வாகம் எனக்கு பதிலாக டோனியை தேர்வு செய்தது இதயத்தை ஈட்டியால் குத்தியது போன்று வேதனை அடைந்தேன்.
சில சீசன்களுக்கு பிறகு சென்னை அணிக்காக எடுப்பார்கள் என்று நினைத்தேன். 13 ஆண்டுகள் உருண்டோடி விட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அழைப்புக்காக இன்னும் காத்துக் கொண்டிருக்கிறேன் என கூறியுள்ளார்.
இதயத்தை ஈட்டியால் குத்தியது போன்று இருந்தது... தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் வேதனை -
Reviewed by Author
on
April 26, 2020
Rating:
Reviewed by Author
on
April 26, 2020
Rating:


No comments:
Post a Comment