சிறுநீரகப் பிரச்சினைகளை போக்கும் வெள்ளரி!
நம் இரத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்கும் பொட்டாசியம் வெள்ளரியில் அதிமாக காணப்படுகிறது.
ஈரல், கல்லீரல் இவற்றில் சூட்டைத் தணிக்கும் ஆற்றல் வெள்ளரிக்கு இருப்பதால் அப்பாகங்களில் ஏற்படும் நோய்களை குணப்படுத்தும். பசியை அதிகரிக்கும். வெள்ளரிக்காயை உண்ணுகையில் பசிரசம் என்னும் நீர் சுரக்கிறது என்று அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
புகைப் பிடிப்போரின் குடலை நிகோடின் நஞ்சு சீரழிக்கிறது. நஞ்சை நீக்கும் அற்புத ஆற்றல் வெள்ளரிக்காய்யில் உள்ளது. மூளைக்கு மிகச்சிறந்த வலிமை தரக்கூடியது வெள்ளரி.
மூளை வேலை அதிகம் செய்து கபாலம் சூடு அடைந்தவர்களுக்குக் குளிர்ச்சியையும், மூளைக்குப் புத்துணர்ச்சியையும் வெள்ளரிக்காய் கொடுக்கிறது. சாதாரணமாக வெள்ளரிக்காயைப் பச்சையாகக்கடித்துச் சாப்பிடலாம் அல்லது வெள்ளரிக்காய்களை மிக்ஸியில் அரைத்து சாறாக்கி குடிக்கலாம். வெள்ளரியின் பயன்கள்
- வெள்ளரிக்காய் குறைவான கலோரியை கொண்டுள்ளது.
- சிறுநீர்ப் பிரிவைத் தூண்டச் செய்து, இரைப்பையில் ஏற்படும் புண்களையும், மலச்சிக்கலையும் குணப்படுத்துகிறது.
- இக்காய் பித்தநீர், சிறுநீரகம் ஆகியன சம்பந்தப்பட்ட அனைத்துக் கோளாறுகளிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
- வெள்ளரிக்காய் கீல்வாதம் சம்பந்தப்பட்ட கோளாறுகளை குணமாக்குவதில் வல்லமைமிக்கதாக உள்ளது.
- இளநீரைப் போன்றே ஆரோக்கிய ரசமாய் வெள்ளரிக்காய்ச் சாறு திகழ்கிறது.
- வெள்ளரியைச் சமைத்துச்சாப்பிடும் போது பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகிய உப்புகளை அழிக்கும்.
- வயிற்றுப்புண் உள்ளவர்கள் வெள்ளரிச் சாறு அருந்தினால் குணமாகலாம்.
- காலராநோயாளிகள் வெள்ளரிக்கொடியின் இளந்தளிர்களை ரசமாக்கி, அதனுடன் இளநீரையும் கலந்து குடித்தால் நோய் குணமாகும்.

சிறுநீரகப் பிரச்சினைகளை போக்கும் வெள்ளரி!
Reviewed by Author
on
April 13, 2020
Rating:
Reviewed by Author
on
April 13, 2020
Rating:


No comments:
Post a Comment